Thursday, July 24, 2014

Spiritual Question & Answers - ஆன்மீக விடையங்கள்


ஆன்மீக விடையங்கள்

எனது வலைப்பதிவுகளில் ஒன்றான பிரதோஷ சிவன் இரண்டாம் பாகத்தில் laalbabaji (facebook.com/laalbabaji) என்பவர் தனது ஆன்மீக கேள்விகளை பதிவு செய்துள்ளார். அவ்வினாவிற்கான விடையம் இப்பதிவில் உள்ளது.

உமது கேள்விகளுக்கு பதில் கூறும் முன் ஒன்றை கூறுகிறேன்: "தமிழிலுள்ள ஓவ்வொரு சொல்லுக்கும் பல பொருளும், அப்பொருள்களுக்கு பற்பல உட்பொருள்கள் உள்ளன. ஆகையால்தான் நம் அனைவருக்கும் இடம், பொருள், காலம் மற்றும் உச்சரிப்பு ஆகிய நான்கையும் உணர்ந்து சொற்களை பயன்படுத்தவேண்டும் என்று குழந்தை முதலே கற்பிக்கபடுகிறது." இவை ஓவ்வொரு தமிழனுக்கும் தெரியும், ஆகையால் உமக்கும் தெரிந்திருக்கும்.

இன்று பிரதோஷம், இந்நன்நாளில் இக்கேள்விகளுக்கு இவ்வடியேன் விளக்கமளிக்க வேண்டுமென்பதே என் ஐயனின் சித்தமாயின், என்னுள்ளே இருந்து விடையங்களையும் அவரே உரைப்பார் .

1) மதம் என்றால் என்ன?

மதம் என்றால் மார்கமேன்றும், தன்நிலை இழத்தலேன்றும் பொருள் கூறலாம்.

மார்கமேன்பதை செல்லும் பாதை என்றும் கூறலாம். அதாவது, ஆதியும் அந்தமும் அறியாத பயணத்தின் வழி என்பது பொருள்.

தன்நிலை இழத்தலேன்பதை நிலை விடுதல்/துறத்தல், பித்தன் அல்லது (இக்கால சொல்) பைத்தியம் என்றும் கூறலாம். தானாகவே தியானம் மற்றும் தவத்தின் வழியாக தன்நிலை இழப்பதற்கும், மற்றவர்களின் தூண்டுதலால் தன்நிலை இழத்தளுக்கும் மிகபெரிய வேறுபாடுள்ளது.

அவை எத்தனை? அவை யாவை? அதன் பொருள் என்ன?

மார்கத்திற்கு வழி என்றும் ஒரு பொருள் உள்ளதே. ஆகையால், அவை எத்துனை வேண்டுமாயினும் இருக்கலாம். அதே போன்று, அதன் பொருள்களும் எத்துனையாயினும் இருக்கும். இதுதான் இதற்க்கு பொருளென்று திடப்பட எவராலும் கூற இயலாது, அப்படி யவரேனும் உரைப்பாராயின், அவர்கள் யாவரும் அறிவிலி ஆவர்.

2) ஆன்மீகம் என்றால் என்ன?

ஆன்மீகம் என்பது அழிய பாகத்தினை (உயிர்) உணரவும் மற்றும் அதன் ஆதியையும் அந்தத்தையும் அறியவும் அதனுடன் இருக்கும் உறவினை புரிந்துகொள்ள உதவும் வழிமுறை. தியானம் ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்றும் கூறலாம். தியானத்தின் முலமாக மனதை ஒருநிலை படுத்தி, அதன் உச்சத்தினை அடைந்து (தவம்), உடலால் உணரப்படும் இன்ப துன்ப நிலைகளை விடுத்தது (தன்நிலை), மெய்ஞானத்தை (எல்லாம் ஒன்று, அவ்வொன்றிலிருக்கும் அனைத்தும் தொடர்புடையது, அணைத்து நிகழிவுகும் காரணம் உள்ளது,....) உணர்த்துவதே ஆன்மீகத்தின் சாரமாகும்.

3) தியானம் என்றால் என்ன?

தியானம் என்பது மனதினை ஒருநிலை படுத்துவதேயாகும். எப்படி தெளிந்த நீரோடையில் யாவும் தெளிவாக அறியமுடிகிறதோ அதேபோன்று மனம் ஒருநிலையாக இருந்தால்தான் தனக்கும், தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை அறிவவோ மற்றும் உணரவோ முடியும். தியான முறையை ஒரு குறிப்பிட்ட வழிபாட்டை உடையவர்களே நெடுங்காலமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் தான் தியானம் அவ்வழிப்பாட்டின் ஒரு அகங்கமாக மற்றவர்களால் அறியப்படுகிறது.

4) தேவன் ஆண்டவன் இறைவன் கடவுள் நாசி இவை யாவை? விளக்கவும்...

உதாரணத்திற்க்கு நீரை எடுத்துகொள்வோம். நீர் எங்குமுள்ளது அது ஒரு பெயராக இருந்தாலும், காவேரி, கங்கை, கோதாவரி மற்றும் கடல் என்று அறியப்படுவது போல் தேவன், ஆண்டவன், இறைவன் என்று பல்வேறாக அறியப்படுபவரும் ஒருவரே.

திருசிற்றம்பலம்

யானறிந்த வரையில் மதம் என்னும் சொல் தமிழ் சொல்லல்ல, வேறொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அதே போன்று, இந்து என்ற பெயரும் அயலார்களால் (மேலைத்தரை வழியாக சிந்து நதி கடந்து வந்தவர்களால்) வைக்கப்பட்டது.

2 comments:

 1. ஓம்கார்...
  நல்லதே நடக்கட்டும்...
  ஆனந்தமாய் இரு...

  ReplyDelete
 2. சிவாய நம
  தெளிவடைந்தோம்.
  நன்றி ஐயா.

  ReplyDelete